DSC_2965

இலங்கை மின்சார சபையினால் நடாத்தப்பட்ட மின்சக்திச் சேமிப்பு நுட்பங்கள் தொடர்பான ஓவிய மற்றும் ஆக்கத்திறன் போட்டி

இலங்கை மின்சார சபையினால் பாடசாலைப் மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியின் இறுதிச் சுற்று, பத்தரமுல்லை “அபே கம” வளாகத்தில் 2017-07-02 ஆந் திகதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளிலிருந்து சுமார் 160 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப்போட்டியின் கருப்பொருள் “ மின் சக்தியை மீதப்படுத்தலும் வினைத்திறன்மிக்க மின்சக்திப் பயன்பாடும்’.
சித்திரப் போட்டி மூன்று பிரிவுகளாக நடாத்தப்பட்டது: தரம் 6 – 8, தரம் 9 – 11 மற்றும் தரம் 12 – 13. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மட்டத்திலான வெற்றியாளர்கள் இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்குக் கவர்ச்சியான பரிசுகள் வழங்கப்படும். முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு மாத்திரமன்றி, நான்கு முதல் பத்து வரையான இடங்களைப் பெறுபவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மின்சக்தியை சேமிப்பதற்கான நுட்பங்கள் தொடர்பான போட்டியானது தரம் 6 முதல் தரம் 13 வரையான பாடசாலைப் பிள்ளைகள் பங்கேற்கக் கூடிய ஒரு திறந்த போட்டியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகச் சிறந்த படைப்பாற்றல்மிக்க ஐந்து ஆக்கங்ளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நட%B