01

இலங்கை மின்சார சபையின் ஊழியர் தினம்

இலங்கை மின்சார சபையின் ஊழியர் தின நிகழ்வுகள், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கெளரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களின் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஏ.கே. சமரசிங்க மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் 2017-07-29 ஆந் திகதி இலங்கை மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது, மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தின் போதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உறுதியான மின்சார சேவையினை வழங்குவதற்காகவும் அயராது உழைத்த இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சேவையைப் பாராட்டி கெளரவ அமைச்சரினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான பெருமை மேலதிகப் பொது முகாமையாளர் முதல் தொழில்நுட்பப் பயிலுநர் வரையான அனைத்து ஊழியர்களுக்கும் உரியதாகும் என்றும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பொது மக்களினதும், வாடிக்கையாளர்களினதும் நலனுக்காகவும் இலங்கை மின்சார சபையின் நற்பெயருக்காகவும் கூட்டாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதன்பின்னர், ஊழியர்களின் மனக்குறைகளைக் கேட்பதற