DSC_0535

இலங்கை மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் விநியோகப் பிரிவு 4 அலுவலக நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

இலங்கை மின்சார சபை மேலதிகப் பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 4) அலுவலக நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், 2017 ஜூன் 15 ஆந் திகதி இல. 25, மாநகர சபை ஒழுங்கை, தெஹிவளை என்ற முகவரியில் நடைபெற்றது. இந்நிர்மாணத்திற்கான மொத்தச் செலவு பெறுமதிசேர் வரி நீங்கலாக 466 மில்லியன் ரூபாவாகும். இச்செயற்திட்டத்தை 2019 பெப்ரவரி 02 ஆந் திகதி பூர்த்திசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வாடகைக் கட்டடமொன்றில் இயங்கி வரும் தற்போதைய அலுவலகம், புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். இந்நிர்மாணத்தின் நோக்கம், விநியோகப் பிரிவு 4 இற்குரிய மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க சேவையினை வழங்குவதாகும்.
இவ்வைபத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழில்நுட்பம்) மெரில் குணதிலக, இலங்கை மின்சார சபையின் உப தலைவர் காமினி வணசேகர, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஏ.கே. சமரசிங்க, மேலதிகப் பொது முகாமையாளர் (DD1) பொறியியலாளர் சுலானி பெரேரா, மேலதிகப் பொது முகாமையாளர் (DD4) பொறியியலாளர் டி.டி.கே. கருணாரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் WPS 1 பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன, பிரதான பொறியியலாளர் – தெஹிவளை செளம்யா குமாரவடு மற்றும் தெஹிவளை ஆணையாளர் தம்மிகா முதுகல ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
DSC_0546

DSC_0505

DSC_0483