DSC_0660

மொரகொல்லை நீர்மின் உற்பத்திச் செயற்திட்டத்தின் மீள் குடியேற்ற வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

மொரகொல்லை நீர்மின் உற்பத்திச் செயற்திட்டத்தின் மீள் குடியேற்ற வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், கெளரவ மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுராதா ஜயரத்ன, கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஆனந்த அலுத்கமகே, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஏ.கே. சமரசிங்க, மேலதிகப் பொது முகாமையாளர் (செயற்திட்டங்கள்) பொறியியலாளர் எஸ்.டி.டபிள்யு. குணவர்தன, செயற்திட்டப் பணிப்பாளர் (மொரகொல்லை மின் உற்பத்தி நிலையம்) பொறியியலாளர் எச்.டி.சீ ஜயரத்ன ஆகியோரினதும் ஏனைய சிறப்பு அதிதிகளினதும் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த மீள் குடியேற்ற வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம், பாதுகாப்புக் கரிசணைகளின் காரணமாக அப்பிரதேசத்திலிருந்து அகற்றப்படும் சில வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கான மீள் குடியேற்ற வசதிகளை வழங்குகின்றது. இந்த வீடமைப்பு நிகழ்ச்சியின் நோக்கம் சிறந்த வசதிகளை வழங்குவதன் மூலம் இக்குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும்.
மொரகொல்லை நீர்மின் உற்பத்திச் செயற்திட்டத்தின் மூலம் 100 ஜிகாவொற் மணித்தியால சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய 30.2 மெகா வொற் நீர்மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இச்செயற்திட்டத்தில் கம்பளை உலப்பனைக்கு அண்மையில் மகாவலி கங்கைக்கு குறுக்கே 37 மீற்றர் உயரமும், 236 மீற்றர் நீளமும் கொண்ட கொங்கிரீட் ஈர்ப்புச் சக்தி அணையொன்றை நிர்மாணிப்பதை உள்ளடக்கியுள்ளது. சூழல் நட்புறவான மின் உற்பத்தி நிலையங்களின் குடும்பத்திற்கு மேலும் ஒரு அங்கத்தவரைச் சேர்க்கும் இச்செயற்திட்டம் 2022 ஆம் ஆண்டில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

DSC_0734

DSC_0677

DSC_0731