DSC_1142

இலங்கை மின்சார சபையில் ஒருங்கிணைந்த தொழில்முயற்சி மூலவளத் திட்ட (ERP) முறைமை நிறுவப்படவுள்ளது.

தற்போது இலங்கை மின்சார சபையினால் அதன் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளுக்காக வித்தியாசமான தனித்தனியான தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சிலவற்றின் திட்டமிட்ட பயனுள்ள காலப்பகுதி முடிவடைந்துள்ளது. இந்த முறைமைகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு காணப்படாமையினால், முகாமைத்துவத்திற்குத் தேவைப்படும் தகவல்களை உரிய நேரத்தில் பெறுவது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு ஒருங்கிணைந்த முறையானது தனித்தனியான முறைமைகளின் தனித்தனியாக தவறுகளை நீக்கிவிடும். அதனால், இலங்கை மின்சார சபையினுள் வினைத்திறன்மிக்க தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமையொன்றை உருவாக்குவதற்கான மிகப் புதிய முன்னேற்றகரமான தொழில்நுட்பத் தீர்வான, ஒருங்கிணைந்த தொழில்முயற்சி மூலவளத் திட்ட முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மின்சார சபை அடையாளம் கண்டுள்ளது.
2016 ஏப்ரல் மாதத்தில் பொது முகாமையாளரினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று, ஒருங்கிணைந்த தொழில்முயற்சி மூலவளத் திட்ட முறையை உருவாக்குவதற்கான ஆலோசகராக KPMG நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்முயற்சி மூலவளத் திட்ட முறையின் அமுலாகக்த்திற்கு ஆளுநர் சபை 2016 ஒக்டோபரில் அங்கீகாரம் வழங்கியது. இலங்கை மின்சார சபை 2017 மே 17 ஆந் திகதி இலங்கை மின்சார சபையில் ஒருங்கிணைந்த தொழில்முயற்சி மூலவளத் திட்ட முறைமையின் அமுலாக்கற் செயற்திட்டத்தின் வடிவமைப்பு கட்டத்திற்கான சேவைகளை வழங்குவதற்காக KPMG யுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான காலப்பகுதி ஒரு வருடமாகும்.
பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளவினுள் செயற்திட்டத்தை முகாமை செய்வதற்காக. செயற்திட்டப் பணிப்பாளர் ஒருவரின் தலைமையில் செயற்திட்ட முகாமை அலகு ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது. பொறியியலாளர் திரு. ரொஹான் செனவிரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (WPS I) செயற்திட்டப் பணிப்பாளரின் கடமைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழில்முயற்சி மூலவளத் திட்ட செயற்திட்ட அலுவலகம் பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2017-07-04 ஆந் திகதி இலங்கை மின்சார சபையின் உப தலைவர் டபிள்யு.ஏ. காமினி வணசேகர, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஏ.கே. சமரசிங்க, மேலதிகப் பொது முகாமையாளர் (கூட்டிணைவு உபாயம்) பொறியியலாளர் (திருமதி) குமுதினி ஹேரத், ஏனைய மேலதிகப் பொது முகாமையாளர்கள், நிதி முகாமையாளர் மற்றும் சிறப்பு அதிதிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தொழில்முயற்சி மூலவளத் திட்டச் செயற்திட்டத்தின் ஆரம்பக் கூட்டம், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மேலதிகப் பொது முகாமையாளர் (கூட்டிணைவு உபாயம்), ஏனைய மேலதிகப் பொது முகாமையாளர்கள், செயற்திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் திரு. ரொஹான் செனவிரத்ன, செயற்திட்ட அணி மற்றும் இலங்கை மின்சார சபையின் பல்வேறு பிரிவுகளைளச் சேர்ந்த பங்குபற்றுநர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழுக் கூட்ட அறையில் நடைபெற்றது.
எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் அக்கறையுடையவர்களின் கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கும் தொழில்முயற்சி மூலவளத் திட்ட முறைமையின் அமுலாக்கம் இலங்கை மின்சார சபைக்கு அத்தியவசியமானதாகவுள்ளது.

image-0-02-06-8b58936655f8051224513f74a5cc7995f0a0b5cfcfdca16335568715b001ded3-V

DSC_1044