CEB | Knowledge Hub

அறிவே பலமாகும் !

மக்களை அறிவூட்டும் காணொளி

மக்களை அறிவூட்டும் வகையில் எம்மால் வெளியிடப்பட்டுள்ள காணொளியைப் பார்த்து மகிழுங்கள் மற்றும் இலங்கையின் மின் உற்பத்தி தொடர்பான தெளிவு பெறுங்கள் !


மின் அதிகாரி 1

இ.மி.ச தொகுதியின் செயற்பாட்டு முறை

மின்சாரம் எவ்வாறு செயற்படுகின்றது ?

மின் உற்பத்தி

நாங்கள் அனைவரும் நுகர்கின்ற மின்சாரமானது, நீர், சூரிய ஒளி, நிலக்கரி, எண்ணெய், இயற்கையான வாயு மற்றும் காற்று போன்ற வளங்களை மின்சக்தியாக மின் நிலையங்களில் மாற்றம் செய்வதனுடாக உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரமானது கம்பி சுருள்களுக்குள் சுழலும் பாரிய காந்தத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. உயர் அழுத்த நீராவி அல்லது நீரூடாக, மின்பிறப்பாக்கியலுள்ள விசையாழி (turbine) அல்லது பாரிய மின் விசிறியொன்று சுற்றப்பட்டு காந்தத்தின் சுழற்சி பெறப்படுகின்றது. இந்தச் செயற்பாடு மூலமாக கம்பி சுருள்களுக்குள் காந்தம் சுழலும் போது மின்னோட்டம் உற்பத்தியாகின்றது.

மின்சாரத் தொகுதி

மின்னோட்டமானது, உயர் அழுத்த மின் பரிமாற்ற மார்க்கங்களாலான மிகப்பரந்த வலை போன்ற ஒரு கட்டமைப்பினூடாக உங்கள் பிரதேச உப நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றது. உப நிலையத்தில், மின்னழுத்தவேறுபாட்டின் அளவு குறைக்கப்பட்டு, அது தலைக்கு மேலாகச் செல்லும் அல்லது நிலத்திற்கு கீழாகச் செல்லும் விநியோக மார்க்கங்களூடாக உங்கள் வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பிரதேசங்களுக்கூடாக செல்லும் மின் மார்க்கங்கள் பொதுவாக 4.200 – 34,500 இடைப்பட்ட வோல்ட் மின்னழுத்தவேறுபாடையவை. பொதுமக்களின் பாவனைக்காக, மன்கமபங்கள் மீது ( அல்லது நிலத்தில் பாதுகாப்பாக வைக்கும் அமைப்பு மீது ) நிறுவப்பட்ட படிகுறை மின்மாற்றியூடாக மின்னழுத்தவேறுபாடானது பாதுகாப்பான பயன்பாட்டிற்குரியதான பொதுவான மின்னழுத்தவேறுபாடான 120 முதல் 240 வரைக்கு மேலும் குறைக்கப்படுகிறது.

How electricity works illustration

மின்சாரம் எவ்வாறு கடத்தப்படுகின்றது ?

மின்சாரமானது அனைத்து நேரங்களிலும் தடை குறைந்த வழியுடைய நிலத்தினையடைவதற்கு முயற்சி செய்யும். – காயங்கள் மற்றும் சேதங்கள் ஏற்படல் அவ்வாறான சந்தர்ப்பங்களிலாகும்.

கடத்திகள் போன்ற மின் மார்க்கங்கள் அதனூடாக மின்சாரம் சுதந்திரமாக செல்வதற்கு இடமளிப்பதுடன் காவலியானது மின்சாரம் பாய்வதற்கு தடையினை ஏற்படுத்தும். சில உதாரணங்களாவன – கடத்திகள் – உலோகம், நீர், ஈரலிப்பானபொருட்கள், மரங்கள் (அவற்றில் ஈரப்பதன் காணப்படுவதனால்), மனிதர்கள் (எமது உடல் நீரினைக் கொண்டிருப்பதனால்)

காவலிகள் - இறப்பர், கண்ணாடி, பீங்கான்கள், ப்ளாஸ்டிக்

வீடுகளினுள் காணப்படும் கடத்திகள் அனேகமாக இறப்பர் போன்ற காவலிகளினால் மூடப்பட்டிருப்பது பொதுவானதாகும். அவ்வாறெனினும் பல்வேறு காரணங்களால் காவலிகளிற்கு சேதம் ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியாது.

மின் அதிகாரி 2

மின்சார முகாமைத்துவம்