CEB | Existing Customer

மின்சாரத்திலிருந்து பாதுகாப்பு

உட்புற பகுதிகளிற்கான மின் பாதுகாப்பு

  • மின் உபகரணங்கள் தண்ணீருடன் தொடர்பு நிலையில் உள்ள போது பயன்படுத்துதல் கூடாது.

  • பாவனையில் இல்லாத மின் உபகரணங்கள் யாவும் அடைப்பான்களின் (ப்ளக்) தொடர்பிலிருந்து அகற்றப்படல் வேண்டும்.

  • உலோகப் பொருட்களினால் மின் உபகரணம் தொடப்படக் கூடாது.

  • மின் உபகரணப் பாவனையின் போது உங்கள் கைகள் ஈரமில்லாதவாறு (உலர்ந்ததாக) இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • மின் சூடாக்கி (ஹீட்டர்) அல்லது வெப்பத்தட்டு அடுப்பு (ஹட்பிளேற்)அருகில் மரத்தளபாடங்கள் வைக்கப்படுதல் அல்லது ஆடைகள் தொங்க விடப்படுதல் கூடாது.

  • தீப்பற்றிக் கொள்ளாத மட்டமான மேற்பரப்பில் மின் சூடாக்கி  (ஹீட்டர்) வைக்கப்படல் வேண்டும்.

  • உபகரண மின்வடங்கள் (வயர்கள்) அடுப்பு  மற்றும் சூடான மேற்பரப்புடன் தொடர்பு படுதலை தவிர்த்தல்வேண்டும்.

  • அடைப்பான்களிருந்து (ப்ளக்) மின் உபகரணகளை அவற்றின் மின்வடங்களை (வயர்களை) இழுப்பதன் மூலம் அகற்றப்படல் கூடாது.

  • பழுது பட்ட மற்றும் வெடிப்புக் கொண்ட மின் உபகரணங்களின் மின்வடங்களிற்கு (வயர்களிற்கு) பதிலாக புதிய மின்வடங்கள் (வயர்கள்) பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

  • வீடுகளில் மின்வடங்களை (வயர்களை) நடமாடும் பகுதிகளில் வைத்தல் கூடாது

  • உபகரண மின்வடங்கள் (வயர்கள்) குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு எட்டாத விதமாகப் பாதுகாப்புடன்கூடியதாக வைக்கப்படல் வேண்டும்.

  • சுற்று நீட்டிப்பு வடங்களை முடியுமானவரை குறைவாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

  • “மின்சுற்றுடைப்பான்“மற்றும் “உருகிகள்” மாற்றம் செய்யப்படும் போது சரியான அளவிலான பாகங்கள் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

  • வெளிப்புறப்பகுதிக்கான மின்சுற்றானது தனியானதொரு சுற்றாக அமைதல் வேண்டும்.

  • மின் அடைப்பான்கள் (ப்ளக்) தவிர்ந்த வேறு பொருட்களை மின் அடைப்பான் சொருகி (ப்ளக் பொயின்ட்) ஒன்றினுள் செலுத்தக் கூடாது.

  • மின்வடங்களை (வயர்களை)  “காபற்” களுக்குக் கீழாக மற்றும் பாரமான தளபாடங்களுக்குக் கீழாக எடுத்துச் செல்ல வேண்டாம்.

  • ஒரே நேரத்தில் அதிகளவு உபகரணங்களை தனியொரு “பொயின்ட்” ல் பயன்படுத்தி கூடுதல் சுமையினை ஏற்றாதீர்கள். அருகாமையில் பல அடைப்பான் சொருகிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

  • வெளிப்புறபாவனையில் போது அதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள “வெளிப்புற” நீட்டிப்பு மின்வடங்களை பயன்படுத்துங்கள்.

  • வெளிப்புறப்பகுதி மின் பாவனைப்புள்ளிகளை, பாதுகாப்பான மற்றும் வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாத மேலுறைகள் கொண்டு பாதுகாப்பு செய்யுங்கள்.

  • வீட்டில் பிரதான ஆளி (சுவிட்ச்) பொருத்தப்பட்டிருக்கும் இடத்தினை அறிந்து வைத்திருங்கள்.

  • மின் அடைப்பான் சொருகியில் (ப்ளக் பொயின்ட்) ஒரு போதும் மின் அடைப்பான்களை (ப்ளக்) பலவந்தமாக உட் செலுத்தாதீர்கள்.

  • திருத்துதல் மற்றும் துப்பரவாக்கலின் போது அனைத்து உபகரணங்களும் மின் அடைப்பான்களிலிருந்து (ப்ளக்) அகற்றப்படல் வேண்டும்.

  • நீரினுள் விழுந்த மின் உபகரணம் ஒன்றினை எடுக்க முயற்சிக்கும் முன்னர், அதனை மின் அடைப்பான்களிலிருந்து (ப்ளக்) அகற்றுங்கள்.

  • எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீருடன் தொடர்பு பட்டிருக்கும் போது, ஈரலிப்பான இடத்திலிருந்து கொண்டு மின் உபகரணம் ஒன்றினைப் பயன்படுத்தாதீர்கள்.

  • மின் உபகரணங்களுக்கு மூன்று பின் சொருகிகளையே (ப்ளக்) பயன்படுத்துங்கள்.

  • ஆடைகள் மற்றும் தளபாடங்களிலிருந்து ஆகக் குறைந்தது 4 அடிகளுக்கு அப்பால் மின் சூடாக்கிகளை (ஹீட்டர் ) வையுங்கள்.

  • மெத்தை சூடேற்றி (heating pad) அல்லது  இடச்சூடேற்றி (space heater) இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உறங்கச் செல்ல வேண்டாம்.

  • பாவனையின் பொழுது அதிக வெப்பமாகும் உபகரணங்களை மின் அடைப்பான் சொருகியிலிருந்து (ப்ளக் பொயின்ட்) வேறு படுத்தி, நிபுணத்துவம் கொண்டவர்கள் மூலம் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

  • மின் குமிழ் ஒன்றினை மாற்றம் செய்வதற்கு முன்னர் ஆளியை துண்டிப்பு (off) செய்யுங்கள்.

 


வெளிப்புற பகுதிகளிற்கான பாவனையில் மின்சாரப் பாதுகாப்பு

வெளிப்புற பகுதிகளிற்கான பாவனையில் மின்சாரப் பாதுகாப்பு